சென்னை:  தமிழகத்தில் மே 20ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  தற்போதைய நிலையில், 9.62லட்சம் டோஸ் கையிருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் ஏற்கனவே பல கட்டமாக 9.62லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், வரும் 20ந்தேதி மேலும் 9லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.   தற்போது 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மே 1ந்தேதி முதல்  18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பபட்டு உள்ளது. ஆனால்,, மருந்து பற்றாக்குறையால் தமிழகம் உள்பட பல மாநிலங்களில்,  18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தாமதமாகி உள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் மே 20ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் 1 கோடி டோஸ் தடுப்பூசிகள் பெற கடந்த அதிமுக அரசு ஆர்டர் செய்வதாக அறிவித்தது. மத்திய அரசும், தமிழகத்திற்கு  13.85 லட்சம் டோஸ் அனுப்புவதாக அறிவித்தது.  இதுவரை 9.62 லட்சம் தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளன. இதில்,  7.95 லட்சம் டோஸ் கோவிஷீல்டையும், 1.66 லட்சம் டோஸ் கோவாக்சினும் கிடைத்துள்ளது.  மீதமுள்ள 4.23 லட்சம் டோஸ் தடுப்பூசி விரைவில் கிடைக்கும் என்றும்,   இதில் 9 லட்சம் டோஸ் தடுப்பூசி வரும் 20ந்தேதி தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்திற்கு கிடைத்துள்ள கொரோனா தடுப்பூசி எவ்வளவு, அதில் உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது எவ்வளவு என்பது குறித்த பட்டியலை மாநில அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி,