சென்னை:
தமிழக சபாநாயகர் தனபால் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துள்ள நிலையில், அதுகுறித்து ஜூலை 1ந்தேதி வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தங்களின் வியூகம் என்னவென்பதை சட்டமன்ற கூட்டத்தொடரின்போது பாருங்கள் என்று ‘வெய்ட் அண்ட் சீ’ திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய நிலையில், சட்டமன்றம் கூட்டப்பட்டு ஜூலை 1ந்தேதி சபாநாயகர் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் மானிய கோரிக்கை விவாதங்களுக்காக வரும் வரும் 28 ஆம் தேதி சட்டமன்றம் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜூலை 1ம் தேதி சபா நாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள அதிமுக முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 பேர் டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில், திமுக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக சட்டசபை செயலரிடம் திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், 3 டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதி மன்றம் இடைக் கால தடை விதித்துள்ள நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்த லில் திமுக 13 இடங்களை கைப்பற்றியது. அதையடுத்து கடந்த மே மாதம் 13ந்தேதி திமுக உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், சட்டசபை கூடும் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அது அறிவித்த பிறகு அகுறித்து நாங்கள் முடிவு எடுப்போம்.. பொறுத்திருந்து பாருங்கள் என்று அதிரடியாகவும், பொடி வைத்தும் பேசியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக சட்டமன்றம் கூடும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலை யில் அதிமுகவுக்கு பெரும்பான்மை இருக்கும் நிலையில், ஜூலை 1ந்தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக எதிர்கொள்ள தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
ஜூன் 28 ஆம் தேதிக் கூடும் சட்டமன்றத்தில் முதல்நாள் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு சபை ஒத்தி வைக்கப்படும் அதைத்தொடர்ந்து, 29, 30ந்தேதி சனி, ஞாயிறு விடுமுறை தினமாகும். பின்னர் ஜூலை 1ம் தேதி சட்டமன்றம் மீண்டும் கூடும்.
அன்றைய தினம் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற மொத்த உறுப்பினர்கள் 233. அதிமுக.: 123, திமுக: 100, காங்.: 7, மு. லீக்: 1, சுயேட்சை: 1. 2 தொகுதிகள் காலியாக உள்ளது. இதில் அதிமுகவே பெரும்பான்மை பெற்றிருப்பதால, சபாநாயகர் பதவிக்கு ஆபத்திலை என்றே தோன்றுகிறது.
இந்த வாக்கெடுப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய, பொறுத்திருந்து பாருங்கள் (wait and see) என்ன என்பது தெரியவரும்…. ஸ்டாலின் பேச்சு.. வெடிகுண்டா அல்லது வெறும் புஷ்வானமா? பொறுத்திருப்போம்…