சென்னை:

ண்ணீர் பிரச்சினையை  காரணம் காட்டி தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால், அந்த பள்ளிகளை தமிழக அரசு கைப்பற்றி நடத்தும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் எழுந்துள்ள தண்ணீர் பிரச்சினை காரணமாக பல தனியார்கள் பள்ளிகள் மாணவர்கள் விடுமுறை அறிவித்து உள்ளன. சில பள்ளிகள் அரைநாள் மட்டும் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுமா என கேள்வி எழுந்து வருகிறது.

இந்தநிலையில்,  தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால்  அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மீறினால்   அந்தப் பள்ளியை அரசே ஏற்று நடத்தும் அமைச்சர்  செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மழை பொழிய வேண்டிய முக்கிய கோவில்களில் இன்று அமைச்சர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட யாகங்கள், சிறப்பு  பூஜைகள் நடைபெற்றன.  ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து,  தண்ணீர் பிரச்னையை காரணம்காட்டி விடுமுறை அறிவித்தால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  குடிநீர் தட்டுப்பாடு உள்ள பள்ளிகளில் உரிய மாற்று ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  முதன்மை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

இதுகுறித்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்க ளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதாக பள்ளி நிர்வாகி உறுதி அளித்த பிறகு தான் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது சில தனியார் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை என தெரிவித்து பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதாக பத்திரிகை செய்திகள் வாயிலாக தெரியவருவதாகவும், மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கும் வகையில் இவ்வாறு விதிகளுக்கு முரணாக செயல்படுவது கண்டிக்கத் தகுந்தது என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பள்ளிகளில் உரிய மாற்று ஏற்பாடுகள் செய்து பள்ளி தொடர்ந்து நடைபெற தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அந்தந்த பள்ளி நிர்வாகங்களின் கடமை என்றும் அவ்வாறு செயல்பட தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அனைத்து தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தவும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக விடுமுறை விடப்பாடல் தொடர்ந்து செயல்படுவதை கண்காணிக்கமாறும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.