சென்னை:

வேலூரில், திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில்  நடைபெற்று வரும் வருமானவரித்துறையின் சோதனையை தொடர்ந்து, திமுகவினரின் இடங்களில் கைப்பற்றப்பட்டுள்ள பணம் தொடர்பான வீடியோவை வருமான வரித்துறை வெளியிட்டு வைரலாகி வருகிறது.

சபேசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணக்கட்டுக்கள்

இந்த நிலையில்,அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் 15 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி வருமான வரித்துறை வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது, சபேசன் வீட்டில் நடைபெற்ற சோதனை மற்றும் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு  அமைச்சர் வேலுமணியின் உதவியாளர் என கூறப்படும் ஒப்பந்த தாரர் சபேசனுக்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.15.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.  மக்களவைத் தேர்தலையொட்டி இங்குள்ள அரசியல் கட்சியினருக்கு வழங்குவதற்காக பணத்தை அங்கு பதுக்கி வைத்திருந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

ஆனால், இதுதொடர்பான எந்தவித வீடியோ, புகைப்படம் எதையும் வருமான வரித்துறையோ, தேர்தல் ஆணையமோ வெளியிட வில்லை.

இதுகுறித்து, இன்று தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதை வருமான வரித்துறையினர் வீடியோ வெளியிட்டுள்ளனர். ஆனால்,  அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் 15 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி வருமான வரித்துறை வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், தற்போது சபேசன் வீட்டில் நடைபெற்ற சோதனை மற்றும் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக அதிமுகவுடன் , தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை கூட்டணி அமைத்து செயல்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.