சென்னை:
செஸ் ஒலிம்பியாட்டின் மிக இளம் வயது போட்டியாளரான பாலஸ்தீனை சேர்ந்த ராண்டா சேடருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மகாபலிபுரத்தில் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. மகாபலிபுரத்தில் இன்று மூன்றாவது சுற்று போட்டிகள் நடைபெற்ற வருகிறது. மூன்றாவது நாளாக இந்திய அணி வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். போட்டி நடைபெறும் இடத்தில் சென்று போட்டி நடத்தும் அதிகாரிகளிடம் நேரடியாக, வசதிகள் எப்படி உள்ளது வேறு ஏதாவது குறைகள் உள்ளதா என கேட்டு தெரிந்து கொண்டார் .

மகாபலிபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மிக இளம் வீரராக பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ராண்டா செடர் என்கிற எட்டு வயது சிறுமி செஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். அவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.