சென்னை:
காங்கிரஸ் பாத யாத்திரை சென்னையில் இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

நாட்டின், 75வது ஆண்டு சுதந்திர தினவிழாவை ஒட்டி, தமிழகத்தில், 234 தொகுதிகளிலும், தலா, 75 கிலோ மீட்டர் பாத யாத்திரை மேற்கொள்வது குறித்து, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சென்னையில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை சத்தியமூர்த்திபவனில் நடக்கும் இந்த ஆலோசனையில், மேலிட பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்லபிரசாத், அழகிரி, செல்வப்பெருந்தகை மற்றும் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.