முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஸ்டாலின் சந்திப்பு

Must read

சென்னை:

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி, விவசாயிகள் தற்கொலை, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருந்தார்.


இதையடுத்து அவர் முதல்வரை சந்திக்க இன்று அனுமதி வழங்கப்பட்டது. ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் இன்று தலைமை செயலகம் வந்து முதல்வருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

More articles

Latest article