நெட்டிசன்:

நேற்று சட்டபசையில் நடந்த அமளியில், தான் தாக்கப்பட்டதாகவும், தனது சட்டை கிளிக்கப்பட்டதாகவும் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினர் கிழிந்த உடையுடன் பேட்டிகளும் அளித்தார். அதே உடையுடன் ஆளுநரை சந்தித்து புகாரும் அளித்தார்.

இந்த நிலையில், “ஸ்டாலின் சட்டை கிழிந்துள்ள விதத்தைப் பார்க்கும்போது, அமளியில் கிழிந்ததாக தெரியவில்லை. கத்திரிககோல் மூலம் வெட்டப்ட்டதாகவே தெரிகிறது” என்று தெரிவித்திருக்கிறார் முகநூல் பதிவர் பழ. கொதமன்.

அவரது பதிவு:

“நான் ஒரு டைலராக சொல்கிறேன்.இது கத்தரிகோலில் வெட்டியது.அதுவும் சரியாக கத்தரிகோலை பயன்படுத்த தெரியாதவர்கள் வெட்டியது.யாராவது பிடித்து இழுத்து கிழித்தால் இது போல் நடுதுணியை கிழிக்க முடியாது.ஆணி போன்ற ஏதாவது ஒன்றில் மாட்டி வேண்டுமானால் கிழியலாம்.ஆனால் அப்படி கிழிந்தாலும் நூல் பிசிறு பிசிறாக இருக்கும்.இது ஏதோ சின்ன கத்தரிகோலால் வெட்டப்பட்டது” என்று பதிவிட்டுள்ள பழ. கவுதமன், “இதை எங்கு வேண்டுமானாலும் வந்து நிரூபிக்க தயார். எந்த ஊடகமாவது இதை கேட்க தயாரா?” “என்றும் கேட்டிருக்கிறார்.