சென்னை:
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்க இருக்கும் நிலையில், விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மூன்றாயிரத்து 185 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் பொதுத்தேர்வைக் கண்டு அச்சப்பட வேண்டாம்; உங்களுக்கு தேவை தன்னம்பிக்கையும் மன உறுதியும்தான்; எந்தவித தயக்கமும் இன்றி தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.