சென்னை:
திமுக தலைவராக ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின் தேர்வு செய்யப்பட்டார்.

தி.மு.க.,வின் 15-ஆவது உட்கட்சித் தேர்தலின் இறுதி கட்டமாக, தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் உள்ளிட்ட பதவிக்கு தேர்தல் நடக்கிறது. தி.மு.க. தலைவர் பதவிக்கு, மீண்டும் ஸ்டாலின் போட்டியிட்டார்.

இதற்காக இருநாட்களுக்கு முன்னதாக அறிவாலயத்தில் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து, பொதுச்செயலர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சென்னை அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் உள்ள ‘விங்க்ஸ் கன்வென்ஷன்’ மையத்தில், இன்று கூடிய திமுக பொதுக்குழுவில், இரண்டாவது முறையாக, தி.மு.க. தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு, பொருளாளராக டி.ஆர். பாலுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.

திமுகவின் துணை பொதுச்செயலாளரானார் கனிமொழியும், முதன்மைச் செயலாளராக கே.என். நேரு மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திமுக-வின் துணை பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டனர். முகமது சகி, கு.பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகியோர் திமுக- வின் தணிக்கை குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.