சட்டசபையில் இருந்து ஸ்டாலின்- திமுகவினர் வெளியேற்றம்! சபாநாயகர்

சென்னை,

மிழக சட்டமன்ற பேரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்,  சட்டமன்ற உறுப்பினர்கள் துரைமுருகன், குமார் உள்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டசபையில், சசிகலா தரப்பினரால் அதிமுக எம்எல்ஏ சரவணன் விலை பேசப்பட்டது குறித்த வீடியோ வெளியானது குறித்து விவாதிக்க திமுக சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டது.

இதை விவாதிக்க முடியாது என சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எம்எல்ஏக்கள் விற்பனை என்ற பதாதைகளுடன் சட்டமன்றத்திற்குள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

சபாநாயகர் கேட்டுக்கொண்டும், தொடர் அமளியில் திமுக ஈடுபட்டதால், ஸ்டாலின் உள்பட அனைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபையைவிட்டு வெளியேறிய அவர்கள்,  சட்டமன்ற எதிரே உள்ள ராஜாஜி சாலையில் அமர்ந்து மறியல் செய்து வருகின்றனர்.


English Summary
Stalin-DMK exit from TN assembly, Speaker dhanapal action,