பத்ம விருதுக்கு தேர்வான தமிழர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து

Must read

சென்னை:
த்ம விருதுக்கு தேர்வான தமிழர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2021-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று மத்திய அரசு அறிவித்தது.குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் – தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம், சாலமன் பாப்பையா, சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர். மேலும் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்-காரமடை அருகே உள்ள தேவனாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாப்பம்மாள் என்பவரும் இடம் பெற்றுள்ளார். 105 வயதிலும் தளராமல் விவசாயம் செய்து வருவதற்காக பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது. தள்ளாத வயதிலும் விவசாயம் செய்யும் பூமித்தாயான பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More articles

Latest article