திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை சென்னை வர ஸ்டாலின் உத்தரவு !

Must read

சென்னை:

தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான அரசியல் சூழலில், எதிர்க்கட்சியான தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமது கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை காலை சென்னை வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்துி உள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு ஆளும் அதிமுக இரு அணிகளாக பிரிந்துகிடக்கிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தொடர்ந்து தமிழகத்தில் அசாதாரண சூழலை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நிலையில் சட்டசபையை உடனடியாக கூட்டுமாறு முதல்வர் மற்றும் பேரவை தலைவருக்கு உத்தரவிடுமாறு ஆளுநருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியிருந்தார்.

அரசின் பணம் பல்வேறு திட்டங்களுக்கு செலவழிக்கப்படும் விநோதமான சூழ்நிலையை தவிர்க்க சட்டசபை உடடினயாக கூட்டப்பட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இத ந்நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவருமே நாளை காலை சென்னை வருமாறு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். நாளை காலை திமுக தலைமையகத்தில் எம்எல்ஏகளுடன் ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும் தகவல்  வெளியாகி உள்ளது.

தற்போதுள்ள அரசியல் சூழலில் திமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் சட்டசபையை கூட்ட தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More articles

Latest article