சென்னை

ற்போது சென்னை வந்துள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை எதிர்த்து டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பாஜக அல்லாத முதல்வர்களைச் சந்தித்து வருகிறார்.  அவ்வகையில் இன்று அவர் சென்னையில் உள்ள தமிழக முதல்வரின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை பஞ்சாப் முதல்வருடன் சந்தித்தார்.  சந்திப்பின் போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோரும் உடன் இருந்தனர்

இந்த சந்திப்புக்குப் பிறகு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாஜக கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம், சட்ட மசோதாவாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் போது அனைத்து எதிர்க்கட்சிகளும் அதனைத் தோற்கடிக்க வேண்டும். மக்களவையில் நிறைவேறும் என்றாலும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தால் அந்த மசோதாவைத் தோற்கடிக்க முடியும்;

இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் சந்தித்து ஆதரவு கோரி வருகிறோம்.  பாஜக அல்லாத மாநிலத்தைச் சேர்ந்த முதலமைச்சர்கள் எங்களுக்கு நல்ல ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள்; அது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது-”

எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,

”ஜனநாயகத்தைக் காக்க எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவது அவசியம்  டில்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரிகள் மீதான அதிகாரம் என உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு சிறப்பான தீர்ப்பு அளித்தது.   ஆனால், அதனை நீர்த்துப்போகச் செய்யும் வண்ணம் அவசர சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது  தேர்தலுக்காக மட்டுமல்ல ஜனநாயகத்தைக் காக்க எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவது அவசியமாக உள்ளது.

பாட்னாவில் நடக்க உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தின் தேதி மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.  மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள டில்லி யூனியன் பிரதேச அரசு மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு பாஜக பல தொல்லைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது ”

எனத் தெரிவித்துள்ளார்.