ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு உண்டியல் போட ஸ்வைப் மெஷின் ரெடி!

Must read

ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்வைப் மெஷினுக்கு பூஜை

திருச்சி,
திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் பெருமாள் கோவிலில் பக்தர்கள் உண்டியல் செலுத்தும் வகையில் ஸ்வைப் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
கோவில் குருக்கள் ஸ்வைப் எந்திரத்திற்கு பூஜை செய்தார். அதைத் தொடர்ந்து ஸ்வைப் இயந்திரம் செயல்பட தொடங்கியது. பக்தர்கள் தாங்கள் செலுத்த விரும்பிய உண்டியல் தொகையை ஸ்வைப் எந்திரத்தில் கார்டு மூலம் செலுத்தினர்.
கடந்த மாதம் பணம் செல்லாது அறிவிப்பை  மத்திய அரசு செயல்படுத்தியதில் இருந்து நாட்டு மக்களிடைய கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மக்கள் பணமற்ற பரிவர்த்தனை செய்யுமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதன் காரணமாக தற்போது அனைத்து சிறுகுறு அங்காடிகளிலும் கார்டு பரிவர்த்தைனை நடைபெற ஆவன செய்யப்பட்டு வருகிறது.
அதுபோல் கோவில்கள், பூங்காக்கள், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலும் பணமற்ற பரிவர்த்தனையினை ஊக்குவிக்கும் பொருட்டு ஸ்வைப் எந்திரங்கள் உபயோப்படுத்தப்பட்டு வருகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலும் பக்தர்கள் உண்டியல் செலுத்த வசதியாக ஸ்வைப் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஸ்ரீரங்கங்கத்தில் உள்ள அரங்கநாதர் கோயிலில் இன்றுமுதல் ஸ்வைப் எந்திரம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அதற்காக கோவில் குருக்கள் பூஜை செய்து, ஸ்வைப் எந்திரம் மூலம் உண்டியல்  கலெக்சன் தொடங்கி வைக்கப்பட்டது.

More articles

Latest article