கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே பரபரப்பான  இலங்கை சாலையில் ஆட்டோ ஓட்டிச்சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர்  16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அப்போதைய ஆளும்  ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவும், எதிர்க்கட்சி வேட்பாளராக இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் போட்டியிட்டனர். இதில், கோத்தபய ராஜபக்சே பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாட்டின் அதிபராக பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து அவரது சகோதரர், மகிந்த ராஜபக்சேவும் பிரதமராக பதவி ஏற்றார். தற்போது இலங்கை அதிபராகவும், பிரதமராகவும் ராஜபக்சே குடும்பத்தினரே இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டின் பிரதமரான கோத்தபய ராஜபக்சே, ஓட்டோ ஒன்றை, பரபரப்பான நெரிசல் மிகுந்த  சாலையில் ஓட்டிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. சாதாரண ஆட்டோ டிரைவர் போல உடையணிந்து, அவர் ஆட்டோவை ஓட்டியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.