இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற பசில் ராஜபக்சேவுக்கு விமான நிலையத்தில் சக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிப்பு.
மக்களின் அன்றாட வாழ்வை புரட்டிபோட்டுள்ள நாட்டின் பொருளாதார பேரழிவு மக்களை பல மாதங்களாக போராட்ட களத்திற்கு தள்ளி உள்ளது.
மஹிந்த ராஜபக்சே தொடங்கி கோத்தபய ராஜபக்சே வரை மக்களின் போராட்டத்துக்கு தங்கள் பதவியை இழந்தனர்.
இருந்தபோதும் தலைமறைவாக இருந்து கொண்டு ஊழலில் திளைத்த ஆட்சியாளர்கள் அரசியல் வாரிசுகளுடன் கைகோர்த்து இலங்கை அரசியலில் நிழல் உலக ஆட்சி செய்து வருகிறார் கோத்தபய ராஜபக்சே.
தற்போதுள்ள சூழலில் இலங்கையின் பொருளாதாரம் சீரடைய இன்னும் ஓராண்டுகளுக்கும் மேல் ஆகலாம் என்ற நிலையில் ஆட்சி பொறுப்பை ஏற்பதில் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரது உறவினர்களும் அமைச்சரவை சகாக்களும் கடந்த சில தினங்களாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அந்த வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கோத்தபயவின் சகோதரர் பசில் ராஜபக்சே துபாய் அல்லது அமெரிக்கா செல்வதற்காக இன்று காலை விமான நிலையத்துக்கு வந்தார்.
விமான நிலையத்தில் அவரை அடையாளம் கண்டுகொண்ட சக பயணிகள் அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று அங்கிருந்த குடியேற்ற அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அவர் மீண்டும் இலங்கையில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் ராஜபக்சே குடும்பத்தினர் மீது விசாரணை நடைபெறும் என்ற அச்சம் நிலவுவதால் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரம் கைவிட்டு போவதற்குள் அவர் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்று கூறப்படுகிறது.