
காலே: இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில், சொந்த மண்ணில் வெறும் 135 ரன்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்து அணி, இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இந்நிலையில், முதல் டெஸ்ட் காலேயில் துவங்கியது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், அவர்களின் முடிவு பெரிய தவறாகிப் போனது.
இலங்கை பேட்ஸ்மென்கள் யாருமே சோபிக்கவில்லை. அந்த அணியின் தினேஷ் சந்திமால் அடித்த 28 ரன்கள்தான் அதிகபட்ச ரன்கள். கடைசியில், 46.1 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்த இலங்கை அணி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து தரப்பில் டாம் பெஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர், தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் பேர்ஸ்டோ 47 ரன்களுடனும், கேப்டன் ஜோ ரூட் 66 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
[youtube-feed feed=1]