டெல்லி: இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வரும் என மக்களவையில் பேசிய  திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறினார்.

பாராளுமன்றத்தில் பட்ஜெட்டின் 2வதுஅமர்வு நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு குறித்து பேசினார்.

மேலும், உறுப்பினர்களின் கேள்விக்கு மத்தியஅமைச்சர்கள் பதில் தெரிவிப்பதில்லை என்று குற்றம் சாட்டியதுடன், இதற்கு மத்திய அரசின் கொள்கைதான் காரணம் என விமர்சித்ததுடன், இலங்கையை போன்று இந்தியாவிலும் மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்படும் என்று சாடினார்.