சென்னை: நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாத நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரன்ட் கொடுத்த நிலையில், அவரை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர்.

நடிகை மீரா மிதுன், சினிமா தயாரிப்பாளர் ஒருவர் குறித்து சாதிய ரீதியிலாக விமர்ச்சித்தாக கூறப்பட்டது. இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கடந்த ஆண்டு (2021ம்)  ஆண்டு ஆகஸ்டு மாதம் மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்கள் மீதான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்று வருகிறது. இங்கு மீராமிதுன் மீது  காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆஜராக மிராமிதுனுக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமினில் வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவரை கைது செய்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து,   நடிகை மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்க இருப்பதாக கூறப்படுகிறது.