லங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவுக்கு  1ஆண்டு பந்துவீச தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவரது பந்து வீச்சின் மீது எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவருக்கு  சர்வதேச கிரிக்கெட்டில் 1ஆண்டு பந்து வீச ஐசிசி தடை விதித்து உள்ளது.

இலங்கையின் இளம் வீரர் அகிலா தனஞ்ஜெயா. தற்போது 25வயதாகும், அவர் சுழற்பந்து வீசுவதில் வல்லவர். அவரது பந்து வீச்சு விதிகளுக்கு மாறாக உள்ளதாக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அவர்மீது புகார் எழுந்த நிலையில், அதுகுறித்து ஐசிசி விசாரணை நடத்தி வந்தது.

இடையில், கடந்த பிப்ரவரி மாதம்  இடைக்கால அனுமதி பெற்று தொடர்ந்து பந்து வீசி வநதார். இந்த நிலையில், ஐசிசி-யின் அனுமதி பெற்ற சென்னையில் உள்ள பரிசோதனை கூடத்தில் அவரது பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதில், அகிலா தனஞ்ஜெயா விதிமுறைக்கு மாறாக பந்து வீசியது நிரூபணமானது. கடந்த 12 மாதத்திற்குள் இரண்டுமுறை அவர் சர்ச்சையில் சிக்கியதால், அவர் சர்வதேச போட்டிகளில் பந்துவீச ஓராண்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

இதன்படி, அகிலா தனஞ்ஜெயா அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பந்து வீச இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.