மூளைச்சாவு:  இலங்கை அகதியின் உறுப்புகள்தானம்! 7 பேருக்கு மறுவாழ்வு!!

Must read

 
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த  இலங்கை  அகதி சத்தியசீலனின்  உடல் உறுப்புகள் தானம்  வழங்கியதில், 7 நபர்களுக்கு  மறுவாழ்வு கிடைத்துள்ளது.
lankan_refugeeமேட்டுப்பாளையம் அருகே வேடர் காலனி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தசத்தியசீலன், கடந்த 19ந் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது, விபத்து ஏற்பட்டு மூளைசாவு அடைந்தார். இதன் காரணமாக அவர் உயிர் பிழைப்பது கடினம் என்ற நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சத்தியசீலனின் உடல் பாகங்களை  தானமாக வழங்க குடும்பத்தினர்  சம்மதம்  தெரிவித்தனர்.
இதனையடுத்து சத்தியசீலனின் கண், சிறுநீரகம், கல்லீரல்,தோல், இதயம், உள்ளிட்டவை  தானமாக பெறப்பட்டன.  இதன் மூலம் 7 பேருக்கு  மறுவாழ்வு  கிடைத்து உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சத்தியசீலன் மகள் கிளின்சி, உடல் உறுப்பு தானம் குறித்து  தனது தந்தை ஆர்வமாக  இருந்ததாகவும், குடும்பத்தில்  உள்ள   அனைவரும் ஏற்கனவே கண் தானம் அள்ளித்தற்கான சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் கூறினார்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article