பச்சமுத்து மீது, சென்னை போலீஸ் கமிசனரிடம் ஆக்கிரமிப்பு புகார்!

Must read

மருத்துவ கல்லூரி சீட் தருவதாக 72 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். குழும நிறுவனர் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது  ஆக்கிரமிப்பு புகார்  எழுந்திருக்கிறது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ் சர்வீஸ் பேருந்துகள் நிறுத்துமிடம் இருக்கிறது.
0
இந்த இடத்ததைத்தான் பச்சமுத்து ஆக்கிரமித்துவிட்டார் என்று வழக்கறிஞர் தேவா தெரிவித்தார்.
இவர், “டெய்சிராணி, மாதவராவ், லட்சுமி, மகேச்ராஜா, உள்ளிட்ட ஆறு பேருக்கு சொந்தமானது அந்த இடம். அதை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து வைத்திருக்கிறார் பச்சமுத்து. இது குறித்து இன்று பகல் 12 மணிக்கு சென்னை காவல்துறை கமிசனரிடம் புகார் கொடுக்க இருக்கிறோம்” என்றார்.

More articles

Latest article