நடிகர் அருண் விஜய் கைது:  போதையில் கார் ஓட்டி போலீஸ் வாகனம்மீது மோதி விபத்து!

Must read

சென்னை:
போதையில் கார் ஓட்டி, போலீஸ் வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் மது போதையில் ஆடிகார்  ஐஸ்வர்யா என்பவர் போதையில் வாகனம் ஓட்டி  விபத்து ஏற்படுத்தி  ஒரு முதியவர் இறந்த செய்தி அனைவருக்கும் தெரிந்ததே.Arun-Vijay-Photos-11அதேபோல் நேற்று இரவும் ஆடிகாரில் உலா வந்த  நடிகர் அருண் விஜய் போதையின் காரணமாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே நின்றிருந்த கார்மீது மோதி விபத்தை ஏற்படுத்தின்ர். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஆடி கார் என்றாலே  ஆக்சிடென்டு கார் என  மாறி வருகிறது.
நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்விஜய். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
நேற்று நடிகை ராதிகா சரத்குமார் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி  சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட நடிகர் விஜயகுமாரின் மகனான, நடிகர் அருண் விஜய் பின்னர் வீடு திரும்பினார்.
ஆடி காரில் அதிவேகமாக வந்த அவர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் எதிரே நின்று கொண்டிருந்த போலீசாரின் வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். காரில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இருந்ததால் அருண் விஜய் காயங்கள் இன்றி தப்பினார்.
இந்த விபத்தில் போலீஸின் வாகனம் சேதம் அடைந்தது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீசார் அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், அளவுக்கு அதிகமாக குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது.
நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் நடிகர் விஜயகுமார் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் வந்தார். அதைத் தொடர்ந்து, பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் அருண் விஜய் மீது, மோட்டார் வாகனச் சட்டம்- 185-வது பிரிவு மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 279-வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து அருண் விஜய்யை கைது செய்துள்ளளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article