ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 3500 பேருக்கு அனுமதி வழங்குவதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளது.
கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் தமிழக பக்தர்கள் கலந்துகொள்ள இலங்கை அரசு அனுமதி பெற வேண்டும். இந்த ஆண்டு, மார்ச் 3, 4ம் தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற உள்ளருது.
இதுதொடர்பான, முதற்கட்ட ஆலோசனை கூட்டம் இலங்கை , யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை சுகாதாரத்துறையினர், கடற்படை அதிகாரிகள், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆட்சியர், மற்றும் இந்தியாவிற்கான இலங்கை தூதர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த 3,500 பக்தர்கள் கலந்துகொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா மார்ச் 3ந்தேதி கொடி ஏற்றப்பட்டு அன்றிரவு சிலுவை பாதை திருப்பலி பூஜையும், மறுநாள் திருவிழா திருப்பலி பூஜையும் நடக்கிறது. இநத் விழாவில் இலங்கை பக்தர்கள் 4500 பேருக்கும், தமிழக பக்தர்கள் 3,500 பேரும் கலந்துகொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்து உள்ளது.
இந்த விழாவில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்களுக்க தமிழக அரசு அட்டையாள அட்டை வழங்குவதுடன், பாதுகாப்பாக, மார்ச் 3ந்தேதி ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் படகில், 3,500 பக்தர்களை அழைத்து கச்சத்தீவு சென்று மறுநாள், திருவிழா முடிந்ததும் ராமேஸ்வரம் திரும்ப அழைத்து வரப்படுவார்கள்.