ராஞ்சி: முதல் டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழந்து 155 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா – நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. இரு அணிகள் இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதோடு, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

இதையடுத்து,  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது. ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில்  நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

நியூசிலாந்து அணியில் துவக்க வீரராக களமிறங்கிய ஃபின் ஆலன் 35 ரன் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார். இதையும் படியுங்கள்: ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த இங்கிலாந்து – 3 ரன்னில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது பின் களமிறங்கிய மார்க் சாப்மேன் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை வாஷிங்கடன் சுந்தரிடம் பறிகொடுத்தார்.

இரண்டாவது வீரராக களமிறங்கிய தேவன் கான்வே நிதானமாகி ஆடி அரைசதம் அடித்தார். 52 ரன்கள் அடித்த நிலையில் அர்தீப் சிங் பந்தில் தேவன் கான்வே ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல், தன் பங்கிற்கு 30 பந்துகளில் 59 ரன்களை குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை குவித்தது. இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களையும், குல்தீப் யாதவ், அர்தீப் சிங், சிவம் மாவி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் இந்தியாவை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்த ஆடுகளம் இவ்வாறு இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. இரு அணிகளும் மிகவும் ஆச்சரியமடைந்தன. ஆனால், நியூசிலாந்து சிறப்பாக விளையாடியது. பழைய பந்தை விட புதிய பந்து அதிகமாக சுழன்றது. பந்தின் சுழற்றியும், பவுன்சரும் எங்களை ஆச்சரியப்படுத்தியது. நானும், சூர்யகுமாரும் பேட்டிங் செய்யும்போது இலக்கை அடைந்துவிடலாம் என நாங்கள் எண்ணினோம். பந்துவீச்சின்போது நாங்கள் கூடுதலாக 25 ரன்களை கொடுத்துவிட்டோம்.

வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங்கை பார்க்கும்போது இது இந்தியா – நியூசிலாந்து இடையேயான போட்டியாக இல்லாமல் வாஷிங்டன் சுந்தார் – நியூசிலாந்து இடையேயான போட்டியாக இருந்தது. வாஷிங்டனும், அக்சரும் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்களோ அவ்வாறே தொடர்ந்து செயல்பட்டால் அது இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.