இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்ய நிதி உதவி

Must read

பிலிப்பைன்ஸ்:
லங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்ய 21.7 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது.


இதுகுறித்து இலங்கையின் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கையில், இந்தியாவும் உலக வங்கியும் சுமார் 2 பில்லியன் டாலர் நிதியை நீட்டிக்க பரிசீலித்து வருவதாகவும், அதனால் அத்தியாவசிய இறக்குமதிகளை தொடர முடியும் என்றும் கூறினார்.

22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில், அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி ஏற்பட்ட பிறகு இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாமல் திணறி வருகிறது.  இது நாணய மதிப்பிழப்பு மற்றும் பணவீக்கத்திற்கு வழிவகுத்தது.

51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனைக் கொண்டுள்ள இலங்கை, நீண்டகால மின்வெட்டு மற்றும் எரிபொருள் மற்றும் மருந்துப் பற்றாக்குறையால் நாடு தழுவிய எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதன் மோசமான பொருளாதார நெருக்கடியின் மூலம் நிதியைப் பெறுவதற்கான பெரியளவிலான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. உதவிக்காக சீனா, ஜப்பான் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியை அணுகியுள்ளதாக அலி சப்ரி கூறினார்.

More articles

Latest article