கொழும்பு:

லங்கையின் புத்தமத திருவிழாவின் போது அலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட, வயதான தும், எலும்பும் தோலுமாக காட்சியளித்த டிக்கிரி யானை உடல்நலமின்றி உயிரிழந்தது.

கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற புத்தம திருவிழாவான  ஈசாலா பெரஹரா திருவிழாவில் நடைபெற்ற அலங்கார அணிவகுப்பில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்றன. இதில் கலந்துகொண்ட பழமையான  மற்றும் வயதான யானை  மீது அலங்கார துணி போர்த்தப்பட்டி ருந்தது.

அந்த  அலங்கார துணி அகற்றப்பட்ட நிலையில், அந்த யானையை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வயதான  பெண் யானை, எலும்பும் தோலுமா காட்சி அளித்தது.

இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் வைரலானது. யானையை பராமரித்து வருபவர்களின் கொடூர செயலுக்கு கடுமையான கண்டனமும் எழுந்தது. இதையடுத்து, இலங்கை அரசு இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இந்த நிலையில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட டிக்கிரி யானை நேற்று மாலை காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து, இன்று அந்த யானைக்கு  புத்த துறவிகள் இறுதிச் சடங்குகள் செய்தனர்.

இதற்கிடையில்,  உலக யானைகள் தினமான ஆகஸ்டு 13-ஆம் தேதி டிக்கிரி யானையின் பரிதாபமிக்க புகைப்படத்தை பகிர்ந்த சேவ் எலிபண்ட் பவுண்டேஷன் அமைப்பு, விலங்குகளை துன்புறுத்தாமல் மக்கள் தங்களது மத நம்பிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.