சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று,  தேமுதிக சார்பில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியால் வாடும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்ய நன்கொடை வழங்குமாறு பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியும், திமுக எம்எல்ஏக்களின் ஒருமாத ஊதியமும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ், தனது குடும்பம் சார்பில் ரூ.50லட்சம் நிதி உதவி வழங்குவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில்,  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தேமுதிக சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்