நேற்று தீ வைக்கப்பட்ட பள்ளிவாசல்

திருகோணமலை:

லங்கையில்  பள்ளி வாசல் நேற்று சிங்கள வெறியர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

திருகோணமலை  பெரியகடை  வீதியில் பிரபலமான ஜூம்ஆ மசூதி உள்ளது.  தற்போது ரம்ஜான் மாதம் என்பதால், பள்ளிவாசலில் நோன்பை நோற்றுவிட்டு தொழுகைக்காக பள்ளி வாயலுக்கு அப்பகுதி இஸ்லாமியர்கள் சென்றனர். அப்போது சிலர், மசூதிக்கு தீ வைத்துவிட்டு ஓடிவிட்டனர்.

அதிர்ந்துபோன இஸ்லாமிய மக்கள் அவசர போலீஸ் எண்ணுக்கு அழைப்பு விடுத்து தகவல் தெரிவித்தனர்.

அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். பெட்ரோல் நிரப்பப்பட்ட நான்கு கேன்கள் அங்கு கெண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  “மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு ஓடிவிட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. ஆனால் அங்குள்ள இஸ்லாமிய மக்கள், “சிங்கள வெறியர்களின் அமைப்பான பொதுபல  சேனாவைச் சேர்ந்தவர்கள்தான் பள்ளிவாசலுக்கு தீ வைத்திருக்கிறார்கள்” என்று கூறுகிறார்கள்.

சமீபகாலமாகவே இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதம் தாக்கப்பட்ட பள்ளிவாசல்

சில மாதங்களுக்கு முன்,  இரத்­தி­ன­புரி மாவட்­டத்­தின் கஹ­வத்­தைப் பிர­தே­சத்­தில்  இஸ்லாமியருக்குச் சொந்தமான 4 மாடிகளைக் கொண்ட ஹாட்வெயர் கடை தீ வைத்து கொளுத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி கொட்டாபிட்டியாவில், இஸ்லாமிய வர்த்தகருக்குச் சொந்தமான கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

ஏப்ரல் மாதம் 25 ம் தேதிஅம்பாறை மாவட்டத்தில் மாயக்கல்லி மலையில் இஸ்லாமியர் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் பொதுபலசேனாவின் பொதுச் செயலர் ஞானசார தேரர் தனது ஆட்களுடன் அத்து மீறி நுழைந்து ஆக்கிரமித்தார்.

தாக்கப்பட்ட இஸ்லாமியர் கடை

பொலநறுவை மாவட்டத்தின் ஒநேகம பிரதேசத்தில் வசிக்கும் இஸ்லாமிய மக்களின் குடியிருப்புகளுக்குள்ளும் பொதுபல சேனா அமைப்பினர் அத்தூ மீறி நுழைந்து ஆக்கிரமித்தனர்.

அதே போல திருகோணமலை செல்வ நகரில் அமைந்துள்ள புத்தவிகாரை சுற்றி இருக்கும் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான 49 ஏக்கர் நிலத்தை சிங்களர்கள் பறிக்கும் முயற்சியில் சிங்களர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இது போல இஸ்லாமியர்களுக்கு எதிராக சிங்கள அமைப்பினர் சிலர் தொடர்ந்து தாக்குதல் நடத்தியும் அச்சுறுத்தியும் வருகிறார்கள்.