மும்பை:
பிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணி 17.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டு 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் மும்பை – லக்னோ அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடக்கு போட்டியில் டெல்லி – பெங்களூரூ அணிகளும் மோத உள்ளன.