டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் ஏப்ரல் 30ந்தேதி தலைநகர் டெல்லியில் மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் ஏப்ரல் 30ம் தேதி மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், மத்திய அரசுடனான மாநில அரசின் உறவுகள், திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடப்படும் என தெரிகிறது.

மேலும்,  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில்,  விரைவான நீதி வழங்கல், வழக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறைப்பு மற்றும் நீதித்துறையில் காலியிடங்கள் அதிகரிப்பது, நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.