கேகேஆர் அணிக்கு 182 ரன் இலக்கு: சதத்தை தவறவிட்ட சன்ரைசர்ஸ் வார்னர்..

Must read

கொல்கத்தா:

பிஎல் 12வது சீசனின் 2வது போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மாலை 4மணி தொடங்கிய இந்த போட்டி, சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது,.

இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதல் போட்டி,. மாலை 4 மணிக்கு தொடங்கியது.  கேகேஆர் அணிக்கு  தினேஷ் கார்த்திக்கும்,  சன்ரைசர்ஸ் அணிக்கு  புவனேஷ்வர் குமாரும் கேப்னராக உள்ளனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங் தேர்வு செய்தார். ஓராண்டு தடைக்கு பிறகு மீண்டு வந்திருக்கும் டேவிட் வார்னரும் ஜானி பேர்ஸ்டோவும் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இன்று டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி அசத்தலாக ஆடி,   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஓராண்டு தடைக்கு பிறகு இன்று களத்தில் இறங்கி உள்ள வார்டன் சிறப்பான ஆட்டத்தை வழங்கினார். அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்தநிலையில், 85 ரன்னில் அவுட்டானது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.   தொடக்கம் முதலே வார்னர் அடித்து ஆடினார். ஜானி பேர்ஸ்டோவும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாகவே ஆடினார்.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 118 ரன்களை குவித்து நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். பேர்ஸ்டோவை 39 ரன்களில் பியூஷ் சாவ்லா அவுட்டாக்கினார். அதன்பிறகு வார்னருடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய வார்னர், 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 85 ரன்களை குவித்து ஆண்ட்ரே ரசலின் பந்தில் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 85 ரன்களில் ஆட்டமிழந்தார். அபாரமான லோ கேட்ச்சை பிடித்து வார்னரை சதமடிக்க விடாமல் வெளியேற்றினார். இதன் காரணமாக சன் ரைசர்ஸ் அணி ரசிகர்கள் சோகமடைந்தனர்.

வார்னரின் விக்கெட்டுக்கு பிறகு சன் ரைசர்ஸ் அணி வீர்களின் வேகம் குறைய தொடங்கியது.  19வது ஓவரில் விஜய் சங்கர் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். கடைசி ஓவரில் விஜய் சங்கர் அடித்த ஒரு பவுண்டரி உட்பட 11 ரன்கள் எடுக்கப்பட்டது.

20 ஓவர் முடிவில் 181 ரன்களை குவித்தது சன்ரைசர்ஸ் அணி. 182 ரன்களை கேகேஆர் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article