கொல்கத்தா:

ண்ட்ரு ரசல் அதிரடி ஆட்டம் காரணமாக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை  6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் வெற்றியை  பதிவு செய்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங் தேர்வு செய்தார். சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் அசத்தலாக ஆடி   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர்.

அதைத்தொடர்ந்து கேகேஆர் அணி வீரர்கள் மட்டையுடன் களமிறங்கினர்.  தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், நிதிஷ் ரானா ஆகியோர் களமிறங்கினர்.

சன் ரைசர்ஸ் வீரர் ஷகிப் அல் ஹசன் பந்தில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து கிறிஸ்லின் 7 ரன்னில் வெளியேறி னார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.  அவரை தொடர்ந்து ராபின் உத்தப்பா இறங்கினார். நிதிஷ் ரானா, உத்தப்பா இணைந்து நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 80 ரன்களை குவித்த நிலையில் ராபின் உத்தப்பா 35 ரன்னில் வெளியேறினார்.

தொடர்ந்து, கேப்டன் தினேஷ் கார்த்திக் இறங்கினார்.  ஆனால், வந்த வேகத்திலேயே  2 ரன் மட்டுமே அடித்த நிலையில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து  ஆண்ட்ரு ரசல் களமிறங்கினார். ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. அதவரை நிதானமாக ஆடிய நிதிஷ் ரானா 50 ரன்கள் எடுத்து  அரை சதமடித்தார்.  தொர்ந்து ஆடிய நிதிஷ் 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளில் 3 சிக்சர், 8 பவுண்டரிகள் அடித்திருந்தார்.

பின்னர் இறங்கிய  ஷுப்மான் கில்  ஆன்ட்ரூ ரசல்  ஜோடி அதிரடியாக ஆடத்தொடங்கியது. ரசூலின் அதிரடி ஆட்டத்தல் பந்துகள் சிக்சர், பவுண்டரி என பறந்தது.  19 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். ஷுப்மான் கில் 18 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். இதையடுத்து, கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் மேன் ஆப் தி மேட்ச் அவார்டு  ரசலுக்கு கிடைத்தது.