கோல்டுகோஸ்ட்:

ஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய 16 தங்கம் வென்று 3வது இடத்தில் உள்ள நிலையில், மேலும் பல பதக்கங்களை பெற வாய்ப்பு பிரகாசமாக இருப்பது தற்போதைய போட்டி முடிவுகளின் படி தெரிய வந்ததுள்ளது.

இன்று நடைபெற்ற   காமன்வெல்த் போட்டியின் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் – செளரவ் கோஷல் இணை அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இதன் காரணமாக இந்த இணை பதக்கம் வெல்வது உறுதியாகி உள்ளது.

அதுபோல விக்ரம் மல்ஹோத்ரா – ரமீட் டாண்டன் இணை காலிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.

ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதிச் சுற்றில் மலேசியாவின் டென்ஸி இவான்ஸ் – பீட்டர் கிரீட் இணையை இந்தியாவின் தீபிகா – செளரவ் இணை 11-8, 11-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

அதேபோன்று, ஆடவர் இரட்டையர் பிரிவில் விக்ரம் மல்ஹோத்ரா – ரமீட் டாண்டன் இணை 11-4, 11-10 என்ற செட் கணக்கில் ஜமைக்காவின் கிறிஸ்டோபர் – லீவிஸ் வால்டர்ஸ் இணையை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

ஆனால், மற்றொரு மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா – ஹரீந்தர் பால் சாந்து இணை 10-11, 10-11 என்ற செட் கணக்கில் நியூஜிலாந்தின் ஜோலி கிங் – பால் கால் இணையிடம் வீழ்ந்து வெளியேறியது.

பாட்மின்டன் போட்டிகளில் ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து, சாய்னா நேவால், ருத்விகா , பிரணாய், சத்விக் ரங்கிரெட்டி – அஸ்வினி பொன்னப்பா இணை,  பிரணவ்சோப்ரா – சிக்கிரெட்டி இணை, அஸ்வினி – சிக்கிரெட்டி இணை, சத்விக் – சிராக் இணை ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

பாட்மிண்டன் போட்டியின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.  அதில், சிந்து 21-15, 21-9 என்ற செட்கணக்கில் ஆஸி.யின் சுவான் வெண்டியை வீழ்த்தினார்.

சாய்னா நேவால் 21-4 என முதல் செட்டை வென்ற நிலையில் அவருக்கு எதிராக ஆடிய ஜெஸிக்கா லீ காயம் காரணமாக வெளியேறினார்.

ருத்விகா கட்டே 21-10, 21-23, 21-10 என்ற கணக்கில் சிங்கப்பூரின் ஜியா மின்னை வீழ்த்தினார்.

அதேபோன்று ஆடவர் பிரிவில் ஸ்ரீகாந்த் 21-10, 21-10 என எளிதாக இலங்கையின் கருணரத்னேவை வென்றார். <

பிரணாய் 21-18, 21-11 என ஆஸி.யின் அந்தோணி ஜோவை வென்றார்.

மற்றொரு பிரிவான கலப்பு இரட்டையர் பிரிவில் சத்விக் ரங்கிரெட்டி – அஸ்வினி பொன்னப்பா இணை-21-10, 21-7 என்ற கணக்கில் கனடாவின் கிறிஸ்டன் சாய் – யகுரா இணையை வீழ்த்தியது.

பிரணவ்சோப்ரா – சிக்கிரெட்டி இணை 21-19, 21-13 என சிங்கப்பூரின் டேனிகிறிஸ்டினா – ஜியா விங்கை வென்றது.

மகளிர் இரட்டையர் பிரிவிலும் அஸ்வினி – சிக்கிரெட்டி இணையும், ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்விக் – சிராக் இணையும் காலிறுதிக்கு முன்னேறியது.

இதன் காரணமாக இந்தியாவுக்கு மேலும் பல பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது.