டில்லி,

2017-18-ம் கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளும் விளையாட்டு கட்டாயமாக்கப்படுவதாக மத்திய விளையாட்டுத் துறை இயக்ககம் அறிவித்து உள்ளது.

ஏற்கனவே நாடு முழுவதும் பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை கட்டாயம் ஆக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய ‘ஆயுஷ்’ துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் தெரிவித்திருந்தார். மேலும் போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் யோகா கட்டாயம் ஆக்கும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

தொடந்து  வரும் கல்வி ஆண்டு முதல் நாடு முழுவதும் பள்ளிகளில் விளையாட்டு  கட்டாயமாக்கப்படுவதாக மத்திய விளையாட்டுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதற்கான கல்வித்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்றும்,  விளையாட்டுக்கென்று மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், அந்த மதிப்பெண்கள் தேர்வின்போது கணக்கில் எடுக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சக்ம் கூறியுள்ளது.

இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறைச் செயலர் இன்ஜெட்டி சீனிவாஸ் கூறுகையில், “இந்தத் திட்டம், அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வரும். இது, நம் கல்வி முறையில் பெரும் மாற்றத்தை  நிச்சயமாகக் கொண்டுவரும்“ என்று கூறியுள்ளார்.