சென்னை: கொரோனா ஊரடங்குக் காரணமாக, தமிழகத்தில் குடும்ப வன்முறைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் பதிவான 5740 அழைப்புகளில், 5702 புகார்களுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளதாகவும், 38 புகார்களின் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில், தமிழகத்தின் மத்திய மண்டலத்தில்தான் அதிகபட்சமாக 1915 புகார்கள் பெறப்பட்டுள்ளன. திருச்சி, தஞ்சை, புதுகை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது இந்த மத்திய மண்டலம்.
ஆனால், திருச்சி, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி போன்ற இடங்களிலிருந்து ஒரு புகார்கூட பதிவுசெய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சென்னையில், மே 22 வரையான நிலவரப்படி மொத்தம் 45 புகார்கள் பதிவாகியுள்ளன.
அதேசமயம், மகளிர் காவலர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளின் வாயிலாக, குடும்ப வன்முறை குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.