சென்னை

ரும் 19 ஆம் தேதி அன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இன்று தமிழகத் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் செய்தியாளர்களிடம்,

“வருகிற 12 ஆம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது  இது  நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் 12 ஆம் தேதி காலை 10 மணிக்குப் பேரவை கூடுகிறது. வரும் 19 ஆம் தேதி தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு \ தாக்கல் செய்கிறார்.   

வரும் 20-ம் தேதி முன்பண மானிய கோரிக்கையும் 21-ம் தேதி முன்பண செலவு கோரிக்கையும் விவாதிக்கப்படுகிறது. 

சபாநாயகருக்குச் சட்டப்பேரவையில் யாரை எங்கு அமர வைக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. சட்டப்பேரவை   நீதிமன்றம்  சட்டசபைத் தலைவரை கட்டுப்படுத்தாது. 

அரசிடமோ மற்றும் சட்டமன்றத்தில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. எனவே சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” 

என்று கூறினார்.