சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சாதி மதமற்றவர் என சான்றிதழ் வழக்க அதிகாரம் இல்லை என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இட ஒதுக்கீடு, சொத்துரிமை மற்றும் பல இடங்களில் சாதி சான்றிதழ் என்பது இன்றியமையாததாகிறது. இந்த சாதிச் சான்றிதழ்களை அந்தந்த பகுதியின் வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.  ஆனால் இதற்குச் சமீபகாலமாக எதிர்ப்பு எழுந்து வருகிறது  இந்த சாதி சான்றிதழ் ஒருவரைத் தாழ்வாக நினைக்க தூண்டுவதாகச் சிலர் கூறி வருகின்றனர்.

அத்தகையோர் தாங்கல் சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க திருப்பத்தூர் மாவட்ட வருவாய்த்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இன்று இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது  அப்போது நீதிபதி இது குறித்து உத்தரவு பிறப்பித்த்ஹுள்ளார்.

அந்த உத்தரவில்,

”வருவாய்த்துறை அதிகாரிகளுக்குச் சாதி மதம் அற்ற்வர் என்னும் சான்றிதழை வழங்க அதிகாரம் இல்லை.  சாதி மதமற்றவர் என சான்றிதழ் வழங்குவதால் பலருக்குச் சொத்து, ,வாரிசு உரிமை,, இட ஒதுக்கீடு ஆகியவற்றில் பாதிப்பு உண்டாகி கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

மேலும் இத்தகைய சான்றிதழ்கள் எதிர்கால சந்ததியினரைக் கடுமையாகப் பாதிக்க வாய்ப்பாளது.  ஆயினும் சாதி மதம் பற்றி கல்வி நிலையங்களில் தெரிவிக்க விரும்பாதோர் அரசின் உத்தரவுப்படி அந்த விண்ணப்பங்களில் சம்பந்தப்பட்ட தகவல்களை பூர்ட்தி செய்யாமல் விட்டு விடலாம்”

என்று தெரிக்கப்பட்டுள்ளது.