டில்லி,
ஜெர்மனியுடன் இணைந்து அதிவேக ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. பயணிகளின் வசதிகள் மற்றும் துரித சேவை போன்றவற்றால் மக்கள் பெருமளவு ரெயில் பயணங்களையே விரும்புகின்றனர்.
prabu
தற்போது ரெயில் பயணத்தின்போது, பயணிகளின் வசதிக்காக  இலவச வைபை, தரமான உணவு வழங்க பல்வேறு திட்டங்களை ரயில்வே துறை செயல்படுத்தி வருகிறது.
இதன் அடுத்தக்கட்டமாக அதிக வேக ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயண நேரம் பெருமளவு குறையும். ஏற்கனவே, மெட்ரோ ரெயில், புல்லட் ரெயில் போன்றவை நடைமுறைப்படுத்தப் பட்டு உள்ளன. அதன் மேம்பாடாக அதிகவேக ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக  டெல்லியில் உள்ள ரயில்வே பவனில் இந்தியாவுக்கும் – ஜெர்மனிக்குமான  புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.
ஜெர்மனி போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அமைச்சர் அலெக்சாண்டர் டாப்ரின்ட் கடந்த 12ந்தேதி இந்தியா வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், இன்று  இந்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரவை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அவருடன் இருநாட்டு அதிகாரிகளும் கலந்துகொள்கிறார்கள்.
gatimaan-express
அதன்பிறகு, அதிவேக ரெயில் குறித்து  இரு நாடுகளுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அமைச்சர் சுரேஷ் பிரபு, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெர்மனி செல்ல இருக்கிறார்.
ஏற்கனவே  டெல்லியிலிருந்து -ஆக்ரா வரை  மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரெயில் கடந்த ஏப்ரல் மாதம் இயக்கப்பட்டது. இந்த ரெயில் 200 கிலோமீட்டர் தூரத்தை சுமார் 100 நிமிடங்களில் கடந்து செல்கிறது.
இந்த அதிவேக ரயிலால் தற்போது பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நாட்டின் முக்கியமான அனைத்து பகுதிகளிலும் அதிகவேக ரெயில் இயக்க இந்திய ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.