வாஷிங்டன்

மெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா  பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது.

உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாகக் குறையத் தொடங்கியது.  இதனால் மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். ஆனால் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரொனா வைரசான ஒமிக்ரான் பரவல் மக்களை மீண்டும் அச்சுறுத்தத் தொடங்கியது.

உலகில் அனைத்து நாடுகளும்  முன்னேசரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.   ஆயினும் கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.   கடந்த ஒரு வாரமாகவே இந்த நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று முன் தினம் 3.35 லட்சம் பேர் பாதிப்பு அடைந்து 2,017 பேர் உயிர் இழந்தனர்.  நேற்று 4.65 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 1,777 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 54.65 கோடி பேர் பாதிக்கப்பட்டு 8.44 லட்சம் பேர் உயிர் இழந்து தற்போது 1.24 கோடி பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 பிரிட்டனில் நேற்று முன் தினம் 1.68 லட்சம் பேர் பாதிப்பு அடைந்து 2,017 பேர் உயிர் இழந்தனர்.  நேற்று 1.83 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 57 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1.25 கோடி பேர் பாதிக்கப்பட்டு 1.48 லட்சம் பேர் உயிர் இழந்து தற்போது 21.82 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பிரான்சில் நேற்று முன் தினம் 1.79 லட்சம் பேர் பாதிப்பு அடைந்து 2,017 பேர் உயிர் இழந்தனர்.  நேற்று 2.08 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 184 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 95.34 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 8.44 லட்சம் பேர் உயிர் இழந்து தற்போது 14.28 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஸ்பெயினில் நேற்று முன் தினம் 99 ஆயிரம் பேர் பாதிப்பு அடைந்து 2,017 பேர் உயிர் இழந்தனர்.  நேற்று 1.01 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 78 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 61.99 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 8.44 லட்சம் பேர் உயிர் இழந்து தற்போது 9.94 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இத்தாலியில் நேற்று முன் தினம் 78 ஆயிரம் பேர் பாதிப்பு அடைந்து 2,017 பேர் உயிர் இழந்தனர்.  நேற்று 98.ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 138 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 58.54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 8.44 லட்சம் பேர் உயிர் இழந்து தற்போது 6.74 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.