வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி! புதிய சட்டதிருத்தம் அமல்!

Must read

சென்னை,
ந்தியா முழுவதும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்துவது கட்டாயம் என்ற சட்டதிருத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அதைதொடர்ந்து தமிழகத்திலும் இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தது வேகக்கட்டுப்பாட்டு கருவி  பொருத்தாக வாகனங்கள் எப்.சி செய்யப்பட மாட்டாது.
speed1
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான சட்ட திருத்தம், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்சி அறிமுகப்படுத்தி, பாராளுமன்ற  இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டது.
மத்திய அரசின்,  சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மத்திய மோட்டார் வாகன விதிகளில் மேற்கொண்ட திருத்தத்தின்படி,
குறிப்பிட்ட போக்குவரத்து வாகனங்களுக்கு அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ. இதில் 9 இருக்கைகளுக்கு மேல் உள்ள அனைத்து பயணிகள் வாகனங்களும், 3 ஆயிரம் கிலோ எடையில் தொடங்கும் அனைத்து சரக்கு வாகனங்களும் அடங்கும்.  இந்த வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும்.
இந்த புதிய விதியின்படி அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும் அதன் உரிமையாளர்கள் ஜூலை 31ம் தேதிக்கு முன்பாக வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொருத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.  பின்னர் அதற்கான காலஅவகாசம் அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதற்கான கெடு  முடிந்தது.

இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் நேற்று வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தாமல் எப்சிக்கு வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. வேலூர் ஆர்டிஓ அலுவலகத்திலும் கருவி பொருத்தாமல் எப்சிக்கு வந்த வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திருப்பி அனுப்பினர்.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்  கூறுகையில்,
‘இந்தியா முழுவதும் சரக்கு வாகனங்கள், பயணிகள் வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. இனி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தி வந்தால்தான் எப்சி புதுப்பிக்கப்படும் என்று  கூறினார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article