அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக தென் மேற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள பெங்களூரு, மைசூரு, தும்கூர், சித்ரதுர்கா மற்றும் பெலகாவி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களில் இருந்து ஒரு மாத காலத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

பெங்களூரில் இருந்து ஜனவரி 31, பிப். 14 மற்றும் பிப் 28 ஆகிய தேதிகளில் அரிசிகரே, கடக், விஜயபுரா வழியாக அயோத்தி செல்லும் ரயில் அயோத்தியில் இருந்து பிப்ரவரி 3, 17 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் புறப்பட்டு பெங்களூரு வந்து சேரும்.

மைசூரில் இருந்து பிப்ரவரி 4 மற்றும் 18 ம் தேதி புறப்படும் சிறப்பு ரயில் பெங்களூரு, அரிசிகரே, ஹோஸ்பேட் வழியாக அயோத்தி சென்று அங்கிருந்து பிப். 7 மற்றும் 21 தேதிகளில் மைசூரு புறப்படும். இது தவிர மைசூரில் இருந்து அயோத்திக்கு பிப் 17 ம் தேதி புறப்படும் சிறப்பு ரயில் அயோத்தியில் இருந்து பிப் 20 ம் தேதி மைசூருக்கு புறப்படும்.

தும்கூரில் இருந்து பிப் 7 மற்றும் 21, சித்ரதுர்காவில் இருந்து பிப் 11 மற்றும் 25 மற்றும் பெல்காமில் இருந்து பிப் 17 ஆகிய தேதிகளில் அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் புறப்பட உள்ளது.

அயோத்தியில் இருந்து தும்கூர் வர பிப் 10 மற்றும் 24, சித்ரதுர்காவிற்கு பிப் 14 மற்றும் 28 தவிர பெல்காமிற்கு பிப்ரவரி 20 ம் தேதியும் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.