டெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக ஜார்கண்ட் முதலமைச்சர்  ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 7வது முறையாக மீண்டும்  சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் மலாக்கத்துறை அதிகாரிகள்  ஹேமந்த் சோரன் வீட்டிற்குச் சென்று அவிசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது மீண்டும் சம்மன் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார்.  இவர்மீது, சட்டவிரோத சுரங்கம் தொடர்பான பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி   வருகிறது. இந்த வழக்கு ஏழு முறையும் ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை. இதனால் அமலாக்கத்துறை 8-வது முறையாகவும் சம்மன் அனுப்பியது. அப்போது அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்து பதில் அளிக்க முடியாது. என்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்த முடியும் என்றால், அதற்கு ஒத்துழைப்பு தருவதாக ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறைக்கு பதில் தெரிவித்திருந்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை கடந்த வாரம் அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியது. பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதன்பின் கைது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. அதிரிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், வருகிற 27 முதல் 31-ந்தேதிக்குள் ஆஜராகி கேள்விளுக்கு பதில் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை விசாரணை நடைபெற்ற பின் ஹேமந்த் சோரன் தனது கட்சி தொண்டர்களை சந்தித்தார். அப்போது “எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம். அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது. நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்போம். ஹேமந்த் சோரன் எப்போதும் உங்களுடன் இருப்பான். உங்களுடைய தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொண்டு, உங்களுடைய மனஉறுதியை உயர்த்துவான்” ஆவேசமாக பேசியிருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஹேமந்த் சோரன் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதால், தனது மனைவியை முதல்வராக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக கூறப்படுகிறது.