சென்னை: ஜனவரி 26ந்தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக ஜன.24 மற்றும் ஜன.26 தேதிகளில், கன்னியாகுமரி மற்றும் திருவனந்த புரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், அதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து இன்று (ஜன.24) கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இரவு 10.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நாளை (ஜன.25) நள்ளிரவு 12 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் ஜன.26 இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயில் ஜன.27 காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (ஜன.24) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் (ஜன.25) மாலை 6.05 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
மறுமார்க்கமாக, ஜன.26ல் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஜன.27 மதியம் 2 மணிக்கு சென்ட்ரல் வரும். பயணிகள் அனைவரும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து சிறப்பு ரயில்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.