சென்னை: மெரினா கடற்கரையில் இன்று நரிக்குறவர்களுக்காக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி  போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நாளை 5வது முறையாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. மாநிலம் முழுவதும் இதுவரை 5 கோடியே 2 இலட்சத்து 54 ஆயிரத்து 633 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, நரிக்குறவர்கள் வசிக்கும் மெரினா கடற்கரை பகுதியில் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம் போடப்பபட்டுள்ளது. இந்த முகாமினை   மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர்ன் ககன்தீப் சிங் பேடி உடன் பங்கற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் இதுவரை 64 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒள்ளது, இதில் 22 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 68 இலட்சத்து 56ஆயிரத்து 278 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை சென்னையில் 83 சதவீதம், இரண்டாவது தவணை 40 சதவீதம் செலுத்தி உள்ளனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது.

இந்தியாவிலேயே மாற்றுதிறனாளிகளுக்கென தனி முகாம் அமைத்து தடுப்பூசி  செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் நரிகுறவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் விதமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி மெரினா கடற்கரையில் பல ஆண்டுகளாக இரவில் தங்கி வருவதால் அவர்களுக்கு தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

நளை நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாம்களிலும்  கோவாக்சின், கோவிட்ஷீல்ட் இரண்டு தடுப்பூசிகளும் இருப்பு உள்ளது. அனைத்து மக்களும் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள மா.சு, மெரினாவில் நூற்றுக்கணக்கான நெறிக்குறவர்கள் படுத்துறங்குவர்.இன்று காலை அவர்களுக்கு தடுப்பூசி போடத்துவங்கினோம். அப்போது நெறிக்குறவ இளைஞர் ஒருவர் ” எங்களுக்கு தடுப்பூசி போடுவதை இந்தி தொலைக்காட்சியில் காட்டச்சொல்லுங்கள், எங்களூரில் (மகாராஷ்ட்ரா) எல்லோரும் போட்டுக்கொள்ளட்டும்” என்றார் என தெரிவித்துள்ளார்.