சென்னை

ல், காது மூக்கு தொண்டை போன்ற சிறப்பு மருத்துவ நிபுணர்களுக்கு தற்போது பணி இன்மையால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது,   நாளுக்கு நாள் தொற்று பரவி வருவதால் மக்கள் வெளியே வரவே அச்சப்பட்டு வருகின்றனர்.   இதனால் பலர் பல்வலி, சொத்தைப் பல் அகற்றல், காது மூக்கு தொண்டை மருத்துவம், பிசியோ தெரபி ஆகியவற்றுக்கு சிகிச்சை பெற தயங்கி வருகின்றனர்.   மிகவும் அவசரம் என்றால் மட்டுமே சிகிச்சைக்குச் செல்கின்றனர்.

இதனால் இந்த சிறப்பு மருத்துவ நிபுணர்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இது குறித்து ஆதம்பாக்கத்தில் உள்ள பல் மருத்துவர் ஒருவர், “எனது மருத்துவமனை 2 மாதங்களுக்கு மூடப்பட்டிருந்தது.   மீண்டும் ஜூன் மாதம் நான் திறந்த  போது 20 நாட்களில் ஒருவர் கூட சிகிச்சைக்கு வரவில்லை.  எனவே நான் மீண்டும் எனது மருத்துவமனையை மூட வேண்டியதாகி விட்டது

அநேகமாக எல்லா பல் மருத்துவமனைகளிலும் இதே நிலை தான் உள்ளது.  நான் தற்போது ஒரு பணியாளரை நியமித்துள்ளேன்.  அவர் ஏதாவது நோயாளி வந்தால் எனக்கு தகவல் அளிப்பார்.  நான் மருத்துவமனைக்குச் செல்வேன். வழக்கமாக தினசரி 15-20 நோயாளிகள் முன்பு வந்தனர்.  தற்போது 3 அல்லது 4 பேர் மட்டுமே வருகின்றனர்.

தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஒரு 36 வயதுப் பெண், “சுத்தம் என்பது பல் மருத்துவமனைகளில் முக்கியமானதாகும்.   இந்த தொற்று பரவும் காலத்தில் சுத்தம் என்பதை விட உயிர் அபாயம் எனவே கூறலாம்.   எனவே சாதாரண பல்வலி, ஈறுகளில் இரத்தம் போன்ற சிகிச்சைக்கு நாங்கள் பல் மருத்துவமனைக்குச் செல்வதில்லை.  விரைவில் வெளியே சாதாரணமாகச் செல்லலாம் என்னும் நிலை வரும்போது சிகிச்சை மேற்கொள்ளலாம் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பல பல் மற்றும் காது மூக்கு தொண்டை மருத்துவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் தொலைபேசி மூலம் சிகிச்சை நடத்துகின்றனர்.  அவசரம் என்றால் மட்டுமே நோயாளிகளை நேரில் வரச் சொல்லும் இவர்கள் சாதாரணமாகத் தொலைப்பேசி மூலமே மருந்துகளைச் சொல்கின்றனர்.

அதே வேளையில் பிசியோ தெரபிஸ்ட் களுக்கு இதுபோல் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.   இவர்களிடம் சிகிச்சை பெறுவோருக்கும் இது மிகவும் சிரமத்தை அளித்து வருகிறது.