சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150வீதம் வழங்கப்படும் என்றும் கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகை நேரடியாக கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்குக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தார். ஊக்கத் தொகையால் விவசாயிகள் ஒரு டன் கரும்புக்கு ரூ. 2900 வீதம் பெறுவார்கள்.

 தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, வேளாண்மை மானிய கோரிக்கை விவாதத்தின்போது,  வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,   கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 வீதம் வழங்கப்படும் என்றும் கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகை நேரடியாக கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்குக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இந்த ஊக்கத் தொகையால் விவசாயிகள் ஒரு டன் கரும்புக்கு ரூ.2900 வீதம் பெறுவார்கள். சுமார் 1 லட்சம் கரும்பு விவசாயிகள் பலன் பெற ரூ.138.33 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் தெரிவித்தார்.

இதையடுத்து,  கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 என்று கணக்கிட்டு வழங்க ரூ.138.33 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தத் தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பின்படி, கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.2,900 கிடைக்கும். இதற்காக நடப்பு பருவத்தில் ஒரு லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்காக மட்டும் ரூ.138.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அறிக்கை தாக்கலுக்கு உத்தரவு: 2020-21-ஆம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்தில் விவசாயிகள் வழங்கிய கரும்பின் அளவை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென சா்க்கரை ஆலைகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஆலைகளில் இருந்து பெறப்படும் தகவல்களை அரசு தரவு மையத்தில் வைத்து ஒருங்கிணைத்து விவசாயிகள் குறித்த பட்டியலைத் தயாரிக்க வேண்டுமென சா்க்கரைத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தரவு மையத்தில் தகவல் களைப் பதிவு செய்யும் பணிக்கு பிற பணியாளா்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. சிறப்பு ஊக்கத் தொகையானது விவசாயிகளுக்கு காலத்தே உரிய நேரத்தில் கிடைக்கச் செய்திட வேண்டுமென சா்க்கரைத் துறை ஆணையா் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாா்.

இதுகுறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவும் அவா் அறிவுறுத்தப்பட்டுள்ளாா் என தனது உத்தரவில் வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி தெரிவித்துள்ளாா்.