டெல்லி: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சிறப்பு டிஜிபி, தன்மீதான பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ் மீது, 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகிறது.  விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகைiய சிறப்புடிஜிபி மீது  சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையில், தன்மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சிறிப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி லலித் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின்போது, ஆஜரான டிஜிபி வழக்கறிஞர், ”காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் டிஜிபிக்கு  எதிராக செயல்படுகிறார்கள்”, எனவே வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ள டிஜிபி மீதான குற்றச்சாட்டுக்கள் சாதாரணமானவை அல்ல, அவை மிகவும் தீவிரமானவை என்று கூறி, வேறு மாநிலத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள்,  சிறப்பு டிஜிபி மீதான பாலியல்  வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற  கோரிக்கையை நிராகரித்துள்ளனர். மேலும், இந்த வழக்கை  சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து கண்காணிப்பு செய்யும் என்று பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்துனர்.