சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில்,ல் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா 2வது அலை கட்டுக்குள் இருப்பதால், பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதுபோல தமிழகத்திலும் முதல்கட்டமாக செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வகுப்புகள் செயல்படும்  என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து,  பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா முன்னெசரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது,

  • 50% மாணவர்களுடன் பள்ளிகள் (TN Schools) திறக்கப்பட்டால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
  • முதல் நாளில் 50% மாணவர்களும், மறு நாள் எஞ்சிய 50% மாணவர்களும் என மாறி மாறி பள்ளிக்கு வர வேண்டும்.
  • பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி (Vaccination) செலுத்திக்கொண்டிருக்க வேண்டும்.
  • கொரோனா அறிகுறி உள்ள ஆசிரியர்களையும் மாணவர்களையும் பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது.
  • முகக்கவசம் அணிதல், அவ்வப்போது கைகளை சுத்தம் செய்தல், தனி மனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப் பட வேண்டும்.
  • பள்ளிகள் வைட்டமின் மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

எனினும், கொரோனா தொற்றின் நிலை சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதன் படி, செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அதன் பிறகு கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.